தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  தமிழ்
 in     
 
 
 
சாம்பன் பதில்கள் கேள்வி & பதில்
   
1. S. ரூபன் வெற்றி (சென்னை)

கேள்வி : நாட்டில் அதிகமாக தப்பு நடக்க என்ன காரணம்? சினிமாவா, டிவி சீரியலா, பாரின் கல்ச்சரா? தப்பு நடக்காமல் இருக்க என்ன செய்யணும்?

பதில் : மனிதகுலம் தோன்றியதிலிருந்தே தப்பு நடந்து கொண்டுதான் இருக்கிறது. சினிமாவும், டிவி சீரியலும், வெளிநாட்டு கலாச்சாரமும் வருவதற்கு முன் தப்பே நடக்கவில்லையா என்ன?! அந்த காலத்திலும் தப்புக்களும் குற்றங்களும் மோசடிகளும் நடைபெறத்தான் செய்தன. ஏன் ஒரு ராவணனும், ஒரு கம்சனும் அன்றே இருக்கவில்லையா..?!

தப்பு நடக்காமல் இருக்கவேண்டும் என்றால் யாருக்கும் எந்த ஆசையும் இருக்கக்கூடாது. இது நடக்கக்கூடிய காரியமா..?!

2. சோலை ராணி (கலை ராணி)

கேள்வி : மனிதனே மனிதனை அழிப்பது எதை காட்டுகிறது?

பதில் : சுயநலத்தின் உச்ச கட்டத்தை.

3. பாக்யா (சோழிங்கநல்லூர், சென்னை)

கேள்வி : நல்லது என்று யோசித்தால் சிலநேரங்களில் அதுவே இடைஞ்சலாகிறது எவ்வளவு உண்மை..? உதாரணம் கருவில் இருப்பது ஆணா பெண்ணா என்பதை வெளியிடக்கூடாது என்பது அரசின் கொள்கை...இதனால் ஆணா, பெண்ணா என்று தெரியாமல் போகிறது. அரசு இதற்கு அனுமதித்தால் அண்மையில் ஏற்பட்டிருக்கும் குழந்தைகள் மாறிய சம்பவம் ஏற்பட்டிருக்காதே.?

பதில் : எந்த ஒரு விஷயமும் ஒரு நாணயத்தை போன்றது. இரு பக்கங்கள் இருக்கத்தான் செய்யும். கருவுற்றிருக்கும்போதே ஆணா, பெண்ணா என்று அறிந்திருந்தாலும், அது தாம் பெற்ற ஆண் மகனா, அல்லது மகளா என்பதை எப்படி நிரூபிப்பது..? இத்தகைய சிக்கல்களை டிஎன்ஏ சோதனை மட்டுமே தீர்க்க முடியும். இந்த ஒரு சம்பவத்திற்காக அரசின் கொள்கையை மாற்றவேண்டும் என்பது சரியாகப்படவில்லை.

குறிப்பு:

உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள்.

மேலும் April 24St, 2008


Recommend this page

Mail us your feedback

மேலும்
 
 
 

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy