|
(1)தினேஷ் (சென்னை) கேள்வி:
புதிதாக ஒரு படத்தின் ரீமிக்ஸ் பாடலுக்கு இசைஞானி
இசையமைப்பது ....உங்கள் கருத்து?
பதில்: காலத்திற்கு ஏற்ற கோலம்
(2)புவனா (நெய்வேலி)
கேள்வி: தத்துவங்கள் இந்த காலத்திற்கு ஒத்து
வரக்கூடியதா..?
பதில்: பண்டைய தத்துவம் எதுவும் தேவையில்லை
என்ற தத்துவம் இப்போதைக்கு ஒத்து வரக்கூடியதே.
(3)செல்வா (பாலவாக்கம், சென்னை)
கேள்வி: மனிதனின் ஆசை எப்போது அடங்கும்? அவன்
அடங்கும்போது என்று கூறிவிடாதீர்கள்?
பதில்: ஈசோனோடாகினும் ஆசை ஆருமின் என்று
திருமூலர் கூறியிருக்கிறார். இந்த பிரபஞ்ச ரகசியத்தை
உணரும்போது ஆசை அடங்கும்.
குறிப்பு:
உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி
கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள். |