|
(1)வேணி (சோழிங்கநல்லூர், சென்னை) கேள்வி:
மனதை ஒருநிலைப்படுத்துவது எப்படி?
பதில்: மனதை யார் ஒருநிலைப்படுத்த
முடியும்..? மனதேதான் தன்னையே
ஒருநிலைப்படுத்திக்கொள்ளவேண்டும். ஒரு இடத்தில் இருந்து
கொண்டே, அதேநேரம் சற்று விலகி நின்று தன்னை பார்த்து
மதிப்பிட்டுக்கொள்ளும் அரிய ஆற்றல் படைத்தவர்கள்
மட்டுமே இதை செய்ய முடியும்.
(2)வெங்கடேஷ் (சென்னை)
கேள்வி: ஒகேனேக்கல் கூட்டு குடிநீர் திட்டம்...
உங்கள் கருத்து?
பதில்: ஒரு நல்ல திட்டத்தை அரசியலாக்கி
கெடுக்கப்போகிறார்களே என்று அஞ்சுகிறேன்.
(3)ஆவுடையப்பன் (திருவள்ளூர், சென்னை)
கேள்வி: தாய்-தாரம் யார் முக்கியமானவர்கள்?
பதில்: தாய் என்பவர் ஒரு தாரமும்தான். தாரம்
என்பவர் ஒரு நாள் தாயாகப்போகிறார். எந்த வேற்றுமையும்
தெரியவில்லை.
குறிப்பு:
உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி
கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள். |