|
(1)முருகவேல் (தி.நகர், சென்னை) கேள்வி:
பானை பிடித்தவள் பாக்கியசாலி விளக்கம்..?
பதில்: குழாயில் தண்ணீரும் வந்தால்..
(2)நீரஜா (சென்னை))
கேள்வி: புரிதல் என்றால்...?
பதில்: அதுவரை தெரிந்திருக்கவில்லை என்பதை
ஒப்புக் கொள்ளுதல்.
(3)ரகுநாதன் (மேற்குமாம்பலம், சென்னை)
கேள்வி: நாய் வாலை நிமிர்த்துவது என்றால்..?
பதில்: கீ வீரமணி, பிரதோஷ பூஜை நடத்தினால்:
கருணாநிதியும்-ஜெயலலிதாவும் கூட்டணி உறவு
வைத்துக்கொண்டால்: கிரேஸி மோகன், 'முண்டம்' என்ற
வார்த்தை இல்லாமல் நாடகம் நடத்தினால்: சென்னை நகரம்
சிங்கப்பூர் போல மாறிவிட்டால்: பல்லவன் பேருந்துகள்
புட்போர்டு அடிக்காமல் ஒடினால், நாய் வாலை
நிமிர்த்தலாம்.
குறிப்பு:
உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி
கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள். |