|
1 சிவந்தி (சென்னை) கேள்வி:
நடைமுறையில் கல்வி என்பது கற்பதற்காகவா..?
வியாபாரத்திற்காவா..?
பதில்: பணத்திற்கு மட்டுமே மதிப்புள்ள
ஒரு சமூகத்தில், கல்வி கற்றுத் தருவதும் வியாபாரம்.
கல்வி கற்பதும் வியாபாரம்.
2 நவநீதகிருஷ்ணன் (சென்னை)
கேள்வி: உணர்வுகள் - உணர்ச்சிகள் இரண்டும்
ஒன்றா? வெவ்வேறா..? உதாரணம்?
பதில்: என் ஜோதி, மாநிலங்களவை உறுப்பினராக
இருந்தது வரையில் அம்மாவிடம் காட்டியது நன்றி உணர்வு.
இப்போது திமுக-வில் தம்மை இணைத்துக் கொண்டபோது
காண்பிப்பது உணர்ச்சிப்பெருக்கு.
3 ராஜா (பெங்களூர்)
கேள்வி: வியாபாரத்தனம் என்பது..?
பதில்: அப்பாவிகளை ஏமாற வைப்பது..,
ஏமாற்றுவது.., இன்னும் அப்பாவிகளை உருவாக்குவது.
இதுதான் வியாபாரத்தனம்.
குறிப்பு:
உங்களுடைய கேள்வியும் இந்தப் பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். ஆங்கிலத்திலேயே கேள்வி
கேட்கலாம். தமிழில் சுவையான பதில்களை பெறுங்கள். |