|
(1)ராமன்(மயிலாடுதுறை) கேள்வி:
எல்லோர்க்கும் பெய்யும் மழை என்பதற்கு எதிர்மறை?
பதில்: பிரதமர் வீட்டுக் குழாயிலும்
தண்ணீர் வரவில்லையாம்!!
(2)ரஹ்மான்(வேலூர்)
கேள்வி: நடிகர் ரகுவரன் மரணம் பற்றி? பதில்:
நல்ல நடிகர், நல்ல மனிதர்.
பதில்: அவரது ஆன்மா சாந்தி அடைய
பிரார்த்திக்கிறோம்.
(3)கண்ணாத்தாள்(சென்னை)
கேள்வி: சிதம்பரம் ஆலயத்தில் தேவாரம்
பாடியதற்காக, மாதம் 3000 ரூபாய் வழங்கிய கருணாநிதியை
ஆறுமுகசாமி, முதல்வரை நேரடியாகச் சந்தித்து நன்றி
கூறினாராமே?
பதில்: ஆண்டவனை மட்டும் நம்பிப் பயனில்லை,
ஆளுபவரையும் நம்பியேயாக வெண்ண்டும் என்ற உண்மையை
உணர்ந்தவர்.
குறிப்பு: உங்களுடைய கேள்வியும் இந்த
பகுதியில் இடம்பெற,
question@chennaionline.com என்ற மின் அஞ்சல்
முகவரிக்கு,
உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். சுவையான பதில்களை
பெறுங்கள். |