|
பிளவுபட்ட உதடுகள் உடைய குழந்தை, உலகில் பல்வேறு
சங்கடங்களை அனுபவிக்க நேரிடுகிறது. முக்கியத் தேவைகளான
பேச்சு, மூச்சுவிடுதல், உணவை மெல்லுதல், விழுங்குதல்
போன்ற செயல்களில் குழந்தைக்கு மிக்க சிரமம் ஏற்படுகிறது.
இக்குறைபாடுகளைச் சரிசெய்வதற்குப் பல்வேறு
மருத்துவர்களின் பங்கு தேவை. எனினும், பல் சீரமைப்பு
மருத்துவரின் பங்கு மிகமிக இன்றியமையாத ஒன்று.
குழந்தைகளுக்கு இளம் பிராயத்தில் செய்யப்படும்
இச்சிகிச்சை மனோரீதியாகவும், உணர்வுப்பூர்வமாகவும்
பெரும் வரப்பிரசாதமாக அமைகிறது.
பிளவுபட்ட உதடுகளையும், அண்ணங்களையும் சரிசெய்வது
மட்டுமின்றி, முகத்தின் தாடை அமைப்பினையும் பல்
சீரமைப்பு மருத்துவர் சீர் செய்கிறார். இவை மட்டுமின்றி
விபத்தினாலோ அல்லது வேறு வியாதியினாலோ ஏற்படும்
முரண்தாடை அமைப்பையும் பல் சீரமைப்பு மருத்துவர் சீர்
செய்கிறார். இத்தகைய பாதிப்புக்குள்ளான நோயாளிகளுக்குப்
பல் சீரமைப்பு மருத்துவ உதவி அவசியமான ஒன்றாகும். |