|
மனிதனின் படிப்படியான வளர்ச்சி, இயற்கையின் இயல்பான ஒரு
செயல். ஆனால் சில சிறுவர், சிறுமிகளிடம் காணப்படும்
முரண்பட்ட தாடை அமைப்பை நோக்கும்போது நமக்குப் பெரும்
வியப்பு ஏற்படுகிறது. முரண்பட்ட தாடை அமைப்புக்குக்
காரணம் சீரற்ற பல்வரிசையே. பதினைந்து முதல் இருபது
சதவிகிதச் சிறார்கள், பெரும் அளவிலும் நாற்பது முதல்
அறுபது சதவிகிதச் சிறார்கள் சிறிய அளவிலும் பல்
சீரமைப்பு சிகிச்சை பெற வேண்டிய அவசியத்தில் உள்ளனர்
என்பது நமக்குக் கிடைத்துள்ள ஒரு புள்ளி விவரம்.
முரண்தாடைச் சீரமைப்புக்கு மக்கள் முன்சராமைக்கும்
காரணம் அவர்களது அறியாமையும் முன் எச்சரிக்கை நடவடிக்கை
இன்மையுமேயாகும். |