அமெரிக்காவின் குழந்தைகள் நலப் பிரிவு, படல
சீரமைப்பியல் துறையை ஒரு பொதுநலப் பணியாகவே
விவரிக்கிறது. 'சீரற்ற பற்களை ஒழுங்குப்படுத்தும்
பணியில் ஈடுபட்ட மருத்துவர்களுக்குத் தொடக்கத்தில்
இப்பணி ஒரு சவாலாகவும் அச்சுறுத்தலாகவுமே இருந்தது.
காரணம் இச்சிகிச்சையினால் பல் ஈறுகளிலும், தசைகளிலும்
ஆறாத இரணங்கள் ஏற்பட்டு விடுமோ என்ற மக்களின்
அச்சம்தான். ஆனால் இன்று மக்களிடம் அந்த அச்சம் விலகி,
பல் சீரமைப்பு மருத்துவர் என்பவர், நமது சீரற்ற,
முறையற்ற, கோணல் மாணலான பற்களைச் சீராக்கி
அழகுபடுத்தும் நிபுணர் என உணரத் தொடங்கிவிட்டனர்' என
அப்பிரிவு கூறுகிறது.