தமிழ்
Astrology
Classifieds
Cricket
Movies
TV Room
Education
Health
Hotels
IT
Maps
BSE/NSE Live
Music
News
City 360
Shopping
e-paper Videos
Air Fares
Friendship
Jobs
Kalyanam
Property
Download Songs
  தமிழ்
 in     
 
 
 
செயற்கைப் பற்கள் நலமோடு வாழக
ஜே ஜி கண்ணப்பன்  
செயற்கைப் பற்கள்

பற்களை இழந்தவர்கள் செயற்கை பற்களைப் பொருத்திக் கொள்ள வேண்டும். இது அத்தியாவசியமானது. முகம் கோணாமலும், உடல்நிலை பாதிக்கப்பாமலும் இருக்க செயற்கை பற்கள் தேவை.

இயற்கை பற்களின் பணியினை செயற்கைப் பற்கள் ஏற்று நலம் புரியும்.

இன்றைய சமூக வாழ்க்கையில் பற்களை இழந்தவர்களும் வரவேற்பு குறைவாகவே இருக்கும். அதோடு, ஜீரண மண்டல கோளாறுகள் ஏற்படும். இன்றைய நவீனத்தில் சிறப்பான பிளாஸ்டிக் மற்றும் வைட்டாலியம் உலோகம் கொண்டு செயற்கைப் பற்கள் செய்யப்படுகின்றன. பகுதிப் பற்கள் என்றும், முழு பற்கள் என்றும் செய்ய முடியும். முழு செயற்கைப் பற்கள் செய்யப்பட்டால், கீழ்த்தாடை பற்கள் அளவில் சிறிதாகயிருப்பதாலும், நாக்கு புரட்டுவதாலும், மேல் செயற்கைப் பற்கள் போல் பிடிமானமாகயிருக்காது. எனினும் ஒருவர் திறமை சார்பாக கீழ் செயற்கைப் பற்களை திறம்பட உபயோகிக்கலாம்.

ஒருவரின் உடல் தகுதி மற்றும் மீதியுள்ள பற்களின் திடம் சார்பாக, பொருத்தப்படும் பற்கள் (Fixed Bridges) செய்து கொள்ளலாம். பல்மருத்துவர் இது பற்றிய ஆலோசனை முடிவாகும். இன்றைய நவீன உலகில் மிருதுவான உணவு முறைகள் உள்ளதால், செயற்கைப் பற்கள் நன்றாகவே செயல்படும்.

பழைய காலத்தில் தங்கம் கொண்டு செயற்கை பற்களை பொருத்திக் கொள்ளுவார்கள். தங்கள் சிறந்த உலோகம். ஆனால், அதனின் வண்ணமும், அதிக செலவு ஆகும் காரணத்தினாலும் இன்றைய சூழ்நிலையில் அது நாகரீகமாக இல்லாததாலும், தங்கம் உபயோகிக்கப்படுவதில்லை. பற்களின் இயற்கை வண்ணங்களில், அக்ரிலிக் பிளாஸ்டிக், கிராமிக் மற்றும் காம்போசிட், ஐயனோமார் கலவைகள் இன்றைக்கு சிறப்பாக உள்ன.

இந்த செயற்கைப் பற்களை மனதால் ஏற்றுக் கொண்டு பயன்படுத்துவது, ஒருவரின் மனப்பாங்கு ஆகும். இழந்த பற்களை ஈடுகட்டுவது செயற்கைப் பற்கள்.

மேலும் April 17th, 2008


Recommend this page

Mail us your feedback

மேலும்
 
 
 

Copyright © 2008, Chennai Interactive Business Services (P) Ltd. All rights reserved.
Phone: 91-44- 420 24601; 420 71942; 420 71943 - cibs@chennaionline.com - Copyright and Disclaimer - Privacy Policy