Tamil

Tamilசெய்திகள்

தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்திக்கிறார்

தமிழக வனத்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி, நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் பெண்கள் மற்றும் இந்து மதம் குறித்து பேசியது சர்ச்சையாகியிருந்தது. இதற்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இதனால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பொன்முடியை துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார். ஆனால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தோ, அமைச்சர் பதவியில் இருந்தோ நீக்கவில்லை. பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ஆளுநரை சந்திக்கிறார். அப்போது பொன்முடியை அமைச்சர் பதவியில் நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More
Tamilசெய்திகள்

ராமதாஸ், அன்புமணி இடையே ஏற்பட்ட சிறு சலசலப்பு சரியாகிவிட்டது – ஜி.கே.மணி தகவல்

பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் இருந்து வருகிறார். கௌரவ தலைவராக ஜி.கே. மணி இருந்து வருகிறார். டாக்டர் ராமதாஸ் கட்சி நிறுவனர் ஆவார். கட்சியில் உறவினருக்கு பதவி வழங்கியது தொடர்பாக கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்க்கும், அன்புமணி ராமதாஸ்க்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மேடையிலேயே, கட்சியில் இருந்தால் இரு… இல்லையென்றால் வெளியேறு… என டாக்டர் ராமதாஸ் கோபமாக தெரிவித்தார். இதற்கிடையே கடந்த சில தினங்களுக்கு முன் பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி ராமதாஸை நீக்குவதாக தெரிவித்தார். இதனால் ராமதாஸ்- அன்புமணி ராமதாஸ் இடையே கட்சிக் தலைவர்கள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாமக கௌரவத் தலைவர் ஜி.கே. மணி கூறுகையில் “மாமல்லபுரத்தில் மே 11ஆம் தேதி நடக்க உள்ள பாமக மாநாட்டில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவருமே கலந்து கொள்வார்கள். இரண்டு தலைவர்களிடமும் பேசிக் கொண்டிருக்கிறேன். ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே சிறு சலசலப்பு இருந்தது. அது தற்போது சரியாகிவிட்டது. அனைத்துக் கட்சியிலும் சலசலப்பு என்பது சாதாரணம்” எனத் தெரிவித்தார்

Read More
Tamilசெய்திகள்

முர்ஷிதாபாத் கலவரம் பற்றி அரசியல்வாதிகள் பேசுதில்லை ஏன்? – முதலமைச்சர் யோகி ஆதித்யராம் கேள்வி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்குவங்க மாநிலத்தின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது: முர்ஷிதாபாத் கலவரம் குறித்து காங்கிரஸ் கட்சி அமைதியாக இருக்கிறது. சமாஜ்வாதி கட்சி அமைதியாக இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் அமைதியாக இருக்கிறது. அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள். அவர்கள் மிரட்டல்களுக்கு மேல் மிரட்டல்களை விடுக்கின்றனர். வங்கதேசத்தில் நடந்ததை அவர்கள் வெட்கமின்றி ஆதரிக்கிறார்கள். வங்கதேசத்தை அவர்கள் விரும்பினால் அவர்கள் அங்கு செல்ல வேண்டும். அவர்கள் ஏன் இந்திய நிலத்திற்கு சுமையாக இருக்கிறார்கள்? வங்கதேசம் பற்றி எரிகிறது. மாநில முதல் மந்திரி அமைதியாக இருக்கிறார். மதச்சார்பின்மை என்ற பெயரில் கலவரக்காரர்களுக்கு, கலவரத்தை உருவாக்க அனைத்து சுதந்திரத்தையும் அளித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக முழு முர்ஷிதாபாத் தீப்பிடித்து எரிகிறது. ஆனால் அரசாங்கம் அமைதியாக இருக்கிறது. இத்தகைய அராஜகத்தை அடக்க வேண்டும் என தெரிவித்தார்.

Read More
Tamilசெய்திகள்

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்ன்.என்.ரவி ஒப்புதல்

கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. அதன்பின் அவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதற்கு தடை கோரி ராஜேந்திர பாலாஜி சார்பில் வக்கீல் ஏ.வேலன் தாக்கல் செய்த மேலமுறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பங்கஜ் மித்தல்,எஸ்.வி.என். பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த மாதம் 17-ம் தேதி விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும் பதிவுசெய்து கொண்ட சுப்ரீம் கோர்ட், ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிய சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், இரு வாரங்களுக்குள் குற்றப்பத்திரிக்கையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கவர்னருக்கு அனுப்பிவைக்க வேண்டும் என உத்தரவிட்டது. மொழியாக்கம் கிடைக்கப் பெற்ற உடனே ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி தமிழ்நாடு அரசு கடிதம் மீது கவர்னர் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கிறோம் எனவும் தெரிவித்தது. இந்நிலையில், ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கவர்னரின் ஒப்புதலை அடுத்து ஓரிரு நாட்களில் அவர்மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Read More
Tamilசெய்திகள்

மோடி-விஜயகாந்த் இடையிலான நட்பு அன்பினால் கட்டமைக்கப்பட்டது – பிரேமலதா விஜயகாந்த்

பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று இருந்த தே.மு.தி.க. தற்போது எந்த கூட்டணியிலும் இல்லை என்று கடந்த வாரம் பிரேமலதா கூறி இருந்தார். இதற்கிடையே சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவாகி உள்ளது. இந்த கூட்டணிக்குள் தே.மு.தி.க.வையும் கொண்டுவர முயற்சி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் பிரதமர் மோடியை தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா புகழ்ந்துள்ளார். கூட்டணி தொடர்பான யூகங்கள் எழுந்து வரும் நிலையில் மோடியை புகழ்ந்து அளித்த பேட்டியை பிரேமலதா சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். சமூக வலைதளம் ஒன்றுக்கு அ�

Read More
Tamilசெய்திகள்

மியான்மரில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப் படை விமானம் மீது சைபர் தாக்குதல்!

அண்டை நாடான மியான்மரில் கடந்த மாதம் 29-ந்தேதி சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏராளமான கட்டிடங்கள், அடுக்கு மாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் இடிந்து

Read More
Tamilசெய்திகள்

புரட்சியாளர் அம்பேத்கரை உயர்த்தி பிடித்துக் கொண்டாடும் இயக்கம் தான் திராவிட இயக்கம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1000 பழங்குடியினர் குடியிருப்புகளை திறந்து வைத்து 49,542 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:- இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள். இந்த சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வுகளை தீண்டாமை குற்றங்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக முழங்கி வரலாற்றை மாற்றிய புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள். அதனால்தான் திராவிட மாடல் ஆட்சியிலே தந்தை பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாகவும், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாகவும் அறிவித்தோம். இன்று காலையில் அம்பேத்கர் மணிமண்டபத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டு தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளோம். சமத்துவத்தை நோக்கி நமது சமூகம் வேகமாக நகர வேண்டும். இந்த மண்ணில் இருக்கிற ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் மாற்றத்திற்கான சிந்தனை வலுப்பெற வேண்டும் என்ற அடிப்படையில்தான் இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளோம். புரட்சியாளர் அம்பேத்கரை உயர்த்தி பிடித்துக் கொண்டாடும் இயக்கம் தான் திராவிட இயக்கம். அவர் எழுதிய சாதிய ஒழிக்க வழி என்ற நூலை 1930-ம் ஆண்டே தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார். புரட்சியாளர் அம்பேத்கர் நமக்கான அடையாளம் என்று தொடர்ந்து முழங்கிக் கொண்டிருக்கிறோம். சமூக நீதி, சமத்துவம், தலித் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் புரட்சியாளர் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் மக்களவையில் 2 முறையும், மாநிலங்களவையில் ஒரு முறையும் பங்கெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலை நாடாளுமன்றத்தில் ஒலித்தவர். அவர் இன்று இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றியதற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் சைதாப்பேட்டையில் எம்.சி.ராஜா மாணவர் விடுதியை திறந்து வைத்துவிட்டு வந்துள்ளேன். இந்த மேடையில் சகோதரர் திருமாவளவன் மகிழ்ச்சியோடு அமர்ந்துள்ளார். காரணம் அவரும் அந்த விடுதியில் தங்கி படித்தவர்தான். இத்தகைய பெருமைக்குரிய விடுதியை திறந்து வைக்கிற நாளில் அந்த விடுதியின் முன்புறம் பெருந்தலைவர் எம்.சி.ராஜாவின் மார்பளவு சிலை மிக விரைவில் வைக்கப்படும் என்பதை பெருமையோடு அறிவிக்கிறேன். திராவிட மாடல் ஆட்சியில் இன்றைக்கு எண்ணிலடங்கா சாதனைகளை செய்து கொண்டிருக்கிறோம். அதனால்தான் சென்னையில் உள்ள பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த மாணவர்களுக்கு இந்த எம்.சி.ராஜா விடுதி பேருதவியாக இருக்கும். எனவே சமூக நீதியை நிலை நாட்டுகிற அரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினரின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான நலத்திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் சமூக நீதி மற்றும் சமத்துவ சிந்தனை குறித்து 6,977 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் திருவள்ளுவர் நாள் அன்று டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் வெளிநாடுகளில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் 174 மாணவர்கள் இங்கு வந்துள்ளனர். இவர்கள் வந்தது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. ஏனென்றால் இது திராவிட மாடல் அரசின் சாதனை. மாணவர்களின் கல்விக்காக பல திட்டங்களை செயல்படுத்துவது மட்டுமல்ல, அதிக எண்ணிக்கையில் விடுதிகளையும் கட்டி இருக்கிறோம். மாணவர்களின் முன்னேற்றம் என்பது கண்கள் மாதிரி என்றால், பெண்களின் முன்னேற்றம் என்பது இதயத்துடிப்பு மாதிரி. அதைத்தான் புரட்சியாளர் அம்பேத்கர் ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை அந்த சமூகத்தின் பெண்கள் முன்னேற்றத்தை வைத்து அளவிடுகிறேன் என்று சொன்னார். அதனால்தான் பெரிதும் விவசாய தொழிலாளர்களாக இருக்கிற ஆதிதிராவிட மகளிரை நில உடமையாளராக மாற்றி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு ‘நன்னி லம்’ என்ற மகளிருக்கான நிலம் வாங்கும் திட்டத்தை செயல்படுத்தி கொண்டிருக்கிறோம். அண்ணல் அம்பேத்கரின் தொழில் முன்னோடிகள் திட்டத்தில் 3,950 தொழில்முனைவோருக்கு ரூ.630 கோடி கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.250 கோடி வீதம் 4 ஆண்டுகளில் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் தொல் குடி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இன்று நான் உறுதியோடு சொல்லிக் கொள்ள விரும்புவது ஆதிதிராவிட மக்களின் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு எப்போதும் துணை நிற்கும். சாதியின் பெயரால் தொடக்கூடாது, கண்ணில் படக்கூடாது, தெருவில் நடக்கக் கூடாது, கோவிலுக்குள் நுழையக் கூடாது என்பதை எல்லாம் நம்முடைய கொள்கைகளால் போராட்டங்களால் இடைவிடாத பரப்புரைகளால் உடைத்து நொறுக்கி விட்டோம். கல்வியும், படிப்பும், வேலையும், பதவியும், ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கையில் அதிகாரம் செலுத்தும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இதுதான் திராவிட இயக்கம் ஏற்படுத்தி இருக்க கூடிய மாற்றம். சாதிதான் பிளவுபடுத்தும் முதலாவது சக்தி. அந்த ஆயிரம் ஆண்டு அழுக்கை ஒழிக்கத்தான் நாம் பாடுபட்டு கொண்டிருக்கிறோம். நாம் அனைவரும் தமிழர்கள் என்று உணர வைப்பதற்கு தான் இன்று பாடுபடுகிறோம். இந்த ஆட்சிதான் பொற்காலம். நமது பாதையும், பயணமும் மிக நீண்டது. என்னைப் பொறுத்தவரைக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமத்துவச் சமுதாயம் அமைய வேண்டும். வெறுப்பு அரசியலை விட, அன்பை விதைக்க கூடிய அரசியல்தான் வலுவானது. ஆற்றல் வாய்ந்தது என்று நான் நம்புகிறேன். தமிழ், தமிழர் என்ற ஒன்றுதான் நம்மை ஒன்றிணைக்கும். சமூக நீதி, பொதுவுடமை சமத்துவம் கொண்ட சமுதாயத்தை உருவாக்க புரட்சியாளர் பிறந்தநாளில் மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம். ஜெய்பீம். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசும்போது இந்தியாவிற்கே வழிகாட்டும் தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார். பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் வகையில் தமிழ்நாட்டை உயர்த்தி இருக்கிறார். இந்தியாவில் அம்பேத்கரின் பிறந்தநாளை சமத்துவ நாளாக கொண்டாடும் முதல் மாநிலம் தமிழ்நாடு என்று கூறினார்.

Read More
Tamilசெய்திகள்

வெயிலின் தாக்கத்தை குறைக்க மாட்டு சாணத்தை வகுப்பறையில் பூசிய கல்லூரி முதல்வர்!

டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் லட்சுமிபாய் கல்லூரியின் முதல்வர் வெயிலின் தாக்கத்தை தணிக்க வகுப்பறையில் பசுவின் சாணம் கொண்டு பூசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கல்லூரி முதல்வர் பிரத்யுஷ் வத்சலா, ஊழியர்களுடன் வகுப்பறை சுவரில் மாட்டுச் சாணத்தை பூசுவது அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. மேலும் அந்த வீடியோவை கல்லூரியின் ஆசிரியர்கள் குழுவில் பகிர்ந்த வத்சலா சி பிளாக்கில் வகுப்பறைகளை குளிர்விக்கும் ஆராய்ச்சியின் ஒரு பகுதி இந்த முயற்சி என்று குறிப்பிட்டார். ஆனால் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் எதிர்மறை கருத்துக்களை குவித்து வருகிறது. வெயிலை தணிக்கும் முயற்சியாக அவர் மாட்டு சாணத்தை பயன்படுத்துவது குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. இதற்கிடையே இதுகுறித்து பேசிய வத்சலா, “இது சுற்றுச்சூழல் ஆய்வுகள் துறையால் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சியின் ஒரு பகுதி. இது வெப்பத்தை கட்டுப்படுத்துவதற்கான ஒரு முயற்சி. ஆறு அறைகளில் இந்த பரிசோதனையை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இது வெறும் மாட்டு சாணம் அல்ல. மாட்டு சாணம், மண், சிவப்பு மணல், ஜிப்சம் பவுடர் மற்றும் முல்தானி மண் ஆகியவற்றைக் கலந்து இந்த பேஸ்ட் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனுடன், அறையின் வெப்பநிலையை அளவிடுவதற்கான உபகரணங்களும் அங்கு நிறுவப்பட்டுள்ளன. எனவே இதுதொடர்பாக வதந்தி பரப்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

Read More
Tamilசெய்திகள்

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பொது மக்களுக்கு துரோகம் இழைக்கப்படுகிறது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு

பிரதமர் மோடி இன்று அரியானா மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். குறிப்பாக மின்சார உற்பத்தி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் பிரதமர் மோடி பேசும்போது கூறியதாவது:- * விக்ஷித் பாரத்திற்கான தீர்வு விக்ஷித் அரியானா ஆகும். டபுள் என்ஜின் அரசால் அரியானா தற்போது டபுள் வேகத்தை பார்த்துக் கொண்டிருக்கிறது. * காங்கிரஸ் ஆட்சியில் மின்தடை இருந்து வந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் மின் உற்பத்தி இரண்டு மடங்காகியுள்ளது. இந்தியா மின்சாரத்தை ஏற்றுமதி செய்து வருகிறது. * கர்நாடகா மாநிலத்தில் மின்சாரம் முதல் பால் வரை எல்லாவற்றின் விலையும் காங்கிரஸ் தலைமையிலான அரசு கீழ் உயர்த்தப்பட்டுள்ளது. * காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பொது மக்களுக்கு துரோகம் இழைக்கப்படுகிறது. இமாச்ச பிரதேசத்தில் அனைத்து வளர்ச்சி திட்டங்களும் முடங்கியுள்ளதால் மக்கள் விரக்தியடைந்துள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Read More
Tamilசெய்திகள்

தமிழகத்தில் 18 ஆம் தேதி வரை வெப்பம் அதிகரிக்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் வரும் 18ம் தேதி வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும் அதிகட்ச வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. குறிப்பாக, வேலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்சமாக 104 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தநிலையில், தமிழகத்தில் மேலும் வெப்பம் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், இந்தியாவில் பல மாநிலங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. மேலும் வெப்ப அலையும் வீசுகிறது. நேற்று அதிகபட்சமாக ராஜஸ்தானில் 111 டிகிரி வெயில் அடித்தது. இந்த நிலையில் டெல்லி மற்றும் வடமாநிலங்களில் வருகிற 18-ந்தேதி வரை வெப்ப அலை வீசும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Read More